சித்தாலபாக்கம் ஏரியின் புனரமைப்பு

இன்றைய காலத்தை  பொறுத்தவரை ஏரி , குளம், குட்டைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றன. பல நீர் நிலைகள் தூர்ந்து போய்விட்டன. பல பெரிய ஏரிகள் தனியார் ஆக்கிரமிப்பால் சிறிய ஏரிகளாகிவிட்டது. நீர் தேங்குவதற்கு வசதிகள் இல்லாமல் போய்விட்டது. இதை தடுக்க ஒரு நாள் மட்டும் பாடுபட்டால் போதாது, தினமும் செயல்பட்டால்தான் அதிவேகமாகச் சீரழிந்து வரும் ஏரி குளங்களை சிறிதளவாவது காப்பாற்ற முடியும்.

இவ்வகையில் தென் சென்னையில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் சித்தாலபாக்கம் ஏரி அமைந்துள்ளது. இது சித்தாலபாக்கம் நகர் பகுதிக்கு முதன்மை நீர் நிலையாகும். ஒரு காலத்தில் இந்த ஏரி வாயிலாக நீர் பாசணம் செய்யப்பட்டு வந்தது.

ஏரியின் சூழலலில் சுவாரஸ்யம் என்ன தெரியுமா?

இது இடம் பெயரும் பறவைகளை ஈர்த்து, பறவை நோக்கர்களுக்கு ஒரு பிடித்தமான இடமாக இருந்தது.

எனினும் இந்த ஏரியை சுற்றி உள்ள பகுதிகளில் சரியான வடிகால் வசதி இல்லாததால் ஏரியில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலந்து மாசு ஏற்பட்டுவிட்டது.

இவ்வாறான முதன்மை நீர் நிலையை சீரமைக்க அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனமான Environmentalist Foundation of India எனும் அமைப்பு Rotary Club of Madras எனும் பங்குதாரரின் உதவியுடன் சித்தாலபாக்கம் ஏரி சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளர்.

ஏரிக்கரையில் அடர்ந்து வளர்ந்திருந்த Prosopis juliflora எனும் சீமைக் கருவேல மரத்தை முழுவதுமாக நீக்கி, ஏரியின் உட்புறத்தில் கொட்டப்பட்ட குப்பைகள், சித்தாலபாக்கம் பஞ்சாயத்து உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டன.

பின்னர் ஏரி மறுசீரமைப்பு பணிகள் முழூவீச்சில் தொடங்கின. ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் தூர்வாரப்பட்டன, 

 • தூர்வாரப்பட்ட மண்ணையே பயன்படுத்தி 5-6 அடி உயரத்தில் கரை கட்டுதல்,
 • ஏரியின் உள் தீவுகள் அமைத்தல்,
 • மரம் நடுதல் மற்றும்
 • கடைவாய் சீராய்வு செய்தல் முதலியன திட்டமிடப்பட்டது.

ஏரிகரைகட்டுதல்:

ஏரியை சுற்றிலும் இரட்டை கரை எழுப்பப்பட உள்ளது. இது மழை காலங்களில் மண் அரிப்பை தடுப்பதோடு, மழைநீரில் கலந்து வரும் தொழில்துறை கழிவுநீர், திண்மப் பொருட்கள் முதலியன படிவதற்கு மேற்கரை உதவும். மேலும் எதிர்காலத்தில், ஏரியை. E. F. I Volunteers தூய்மை பணிகள் செய்வதற்கும் சுலபமாக அமையும்.

தீவுகள்அமைத்தல்:

ஏரியின் உட்புறத்தில் ஆங்காங்கே தீவுகள் அமைத்து அதில் புங்கம் போன்ற மர வகைகளை நடவும் திட்டம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் நீரின் ஓட்டம் அதன் திசைவேகத்தை திருப்புவதற்கு ஒருமுகப்படுத்தப்பட்ட (Concentric islands) தீவுகளும் அமைக்கபட உள்ளது.

கழிவுநீர்புகும்வாயிலைஅடைத்தல் –       

ஏரியை சுற்றியுள்ள பல திசைகளில் இருந்து மாசு கலந்து வரும் கழிவுநீர், ஏரி நீரை எளிதில் தீமை அடையச்செய்து அதில் வாழும் நுண்ணுயிர்களை கொன்று நீர் மாசு அடையச்செய்கிறது. ஆகையால் இவ்வாயில்கள் அடைக்கப்பட்டன.

நீர் புகும் வாயில்:

மழைநீர் புகுவதற்கு ஏரியின் ஒரு பகுதியில் நீர் புகும் நுழைவாயில் அமைக்கபடும்.

வேலி அமைத்தல் –

 • இது நீர்நிலைக்கான பாதுகாப்பின் முதல் நிலையாகவும்,
 • மக்கள் குப்பை கொட்டுவதைத் தடுக்கவும் உதவுகிறது.
 • இவ்வாறு வேலி அமைப்பதின்மூலம் சிறுவர்கள் அறியாமல் நீரில் விழுந்து மூழ்குவதைத் தடுக்கிறது.

மரம் நடுதல்

ஏரியின் உட்புறத்தில் அமைக்கப்பட்ட தீவுகளில் மரம் நடுவதால்,

 • பருவழை காலங்களில் பறக்கும் பறவைகள்,
 • வேட்டைப் பறவைகள்,
 • தாணியங்கள் மற்றும்
 • பூச்சி உண்ணும் பறவைகள் இங்கு வந்து தஞ்சமடைகிறது.
 • மேலும் இது நீர்வாழ் உயிரினங்களுக்கு ஏற்ற இடமாகவும் அமைகிறது.

சித்தாலபாக்கம் ஏரியை சுற்றிலும் ஆக்கிரமிப்பு அதிகம் இருந்தது. இதனை EFI Volunteers, தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் உதவியுடன் இணைந்து ஏரியின் வரம்பில் இருந்த அனைத்து ஆக்கிரமிப்புகளும் அடையாளம் காணப்பட்டு அவை படிப்படியாக அகற்றப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு நாம் ஏரியை சீரமைப்பதன்மூலம் இரசாயன மாற்றத்தை சரிசெய்தல், உயிரியல் அமைப்பை மேம்படுத்துதல், பூர்வீக தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை மீண்டும் அறிமுகப்படுத்துதல் போன்றவை சாத்தியமாகும்.

5 thoughts on “சித்தாலபாக்கம் ஏரியின் புனரமைப்பு

 1. Thanks for undertaking such important work. What will happen to the people once the encroachments are removed? Will they be rehabited properly?

 2. You guys are really awesome.I initially thought that this restoration work was done by the Municipality.Please construct a fencing around the lake or at least on the M-M Road side. Also the flow of drainage water from nearby localities need to be arrested.Hats off to you All.Jai Hind

Leave a Reply