கரசங்கால் ஏரியை சீரமைத்தது E.F.I

காஞ்சிபுரம்   மாவட்டம் கரசங்கால் கிராமம் துண்டல்  கழனி ஏரி, இந்த ஏரி  சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்டது  கரசங்கால் கிராம மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது இந்த ஏரி தான் . இந்த ஊரில்  ஒரு சில பேர் மட்டுமே விவசாயம் செய்து வருகின்றனர்.விவசாயம்  மற்றும் குடிநீர் ஆகிய இரண்டுக்கும் இத ஏரியை பயன்படுத்துகின்றனர்.இந்த ஏரி  ஆனது பல ஆண்டு காலமாக தூர்வாரப்படாமலும் அழிந்து போகும் நிலையில் இருந்தது. இதனை கருத்தில் கொண்டு EFI-தொண்டு நிறுவனம்  மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியை 35 நாட்களில் சீமை கருவேலம் மற்றும் இதர குப்பைகளை அகற்றி மூன்று  பக்கம் புதிதாக கரை அமைத்து ஒரு பக்கம் கரையை பலப்படுத்தப்பட்டது .புதிதா அமைக்கப்பட்ட கரைகளில் நட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரித்து வருகிறது .மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பாக வேலி அமைக்கப்பட்டுள்ளது .

Volunteer with E.F.I for India & her Environment.

Jai Hind.

Leave a Reply