வடலூர், குறிஞ்சிப்பாடி ஏரிகளை புனரமைக்கிறது EFI.

தன்னார்வ தொண்டு மூலம் புத்துயிர் பெரும் கடலூர் மாவட்ட நீர் நிலைகள்.
பேரிடர் மாவட்டமாக மாறி வரும் கடலூரில் பல நீர் நிலைகள் கால போக்கில் அழிந்து வருகின்றன. நீர் ஆதாரங்களான ஏரி, குளம், குட்டைகள் பலவும் தூர்வாரப்படாமல் பராமரிப்பின்றி இருக்கின்றன. ஆண்டுதோறும் புயல் மழையால் புரட்டிபோட்டபின்பும் கடலூரில் வெயில் காலங்களில் நீர் தட்டுப்பாடு ஏற்படுகின்றது. இந்த நீர் ஆதாரங்களை  நம்பி வாழும் பல உயிரனகளும் அழிந்து வருகின்றன.
நீர் ஆதாரங்கள் பராமரிக்க படாததால் வெப்பநிலை மாற்றம், குடிநீர் தட்டுப்பாடு, உயிரினங்கள் இழப்பு என பல பாதிப்புகள் உண்டு. இந்த பாதிப்புகளில் இருந்து மீளவும், சுற்று சூழல் பாதுகாப்பை மனதில் கொண்டும் EFI தமிழகத்தில் உள்ள பல நீர் ஆதாரங்களை தூர் வாரி பராமரித்து வருகிறது. சென்னை, கோவை, புதுவை உள்ளிட்ட பல இடங்களில் உள்ள 53 ஏரி, குளம், குட்டைகளை தன்னார்வ தொண்டு மூலம் அரசு அனுமதி உடன், உள்ளூர் மக்களின்  ஈடுபாடுடன் EFI சுத்தம் செய்து, அறிவியல் பூர்வமான புனரமைப்பு செய்து வருகின்றது.
வடலூர்  ஏரி, குறிஞ்சிப்பாடி ஏரிகளில் தன்னார்வு புனரமைப்பு பணிகளில் தொடங்கி கடந்த 20 நாட்களாக நடந்து வருகின்றன. இந்த பணியில் ஏரிகளில் உள்ள ஆகாய தாமரை, சீமை கருவேலம் மற்றும் இதர பல குப்பைகள் அகற்ற பட்டு,ஏரி தூர்வாரப்பட்டு, அந்த மணலை வைத்து கறைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த செயல் மூலம், ஏரியின் கொள்ளளவு அதிகரித்து நீர் தேக்கும் வசதி பெருகும். ஏரியின் கழிவுகள் அகற்ற பட்டு சுத்தம் செய்வதினால் சுகாதார சீர்கேடு தவிர்க்கப்படும், கறைகளை பல படுத்த பனை மர கண் உட்பட உள்ளூர் மர கன்றுகள் நட பட்டு பல்லுயிரின பெருக்கத்துக்கு வழிவகுக்க படும்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள இன்னும் பல கிராமப்புற ஏரி, குளங்களை சரி செய்ய EFI முன்வந்துள்ளது. மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, உள்ளூர் மக்களின் ஈடுபாடுடன் பல நீர் நிலைகளை வருங்காலத்திற்காக பாதுகாக்கும்  முயற்சிகளை EFI எடுத்துவருகிறது.

Contact Cuddalore EFI: 97894-77534

Leave a Reply