E.F.I’s சிற்றம்பலம்

கடலூர் மாவட்டத்தில் நகர்புற காடு அமைக்கும் திட்டம் சிற்றம்பலத்தில் தொடங்கப்பட்டது.

குறைந்த பரப்பில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட்டுவைத்து அடர்ந்த குறுங்காடு உருவாக்கும் முறையை செயல்படுத்த தன்னார்வ தொண்டு நிறுவனமான Environmentalist Foundation India (E.F.I) திட்டமிட்டது.

கடலூர் கடற்கரையில் இருந்து சுமார் 22 கி. மீ. தொலைவில் சிற்றம்பலம் பகுதியில் தண்டேஸ்வர நல்லூர் நகராட்சியின்கீழ் ‘ஓமக்குளம்’ அமைந்துள்ளது. இதற்கு அருகில் பல வருடங்களாக குப்பைமேடாக காட்சியலிந்த இடத்தை, சுமார் 14 ஆண்டுகளாக தமிழ்நாடு உள்பட 16 மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் சென்னையை சேர்ந்த அரசு சாரா அலல்து தன்னார்வ தொண்டு நிறுவனமான Environmentalist Foundation India (E.F.I) எனும் அமைப்பு அடர்வனமாக மாற்றியமைக்க திட்டமிட்டது. பின், சுமார் 1.4 ஏக்கர் பரப்பளவில் இருந்த குப்பைகளை நீக்கி, மரக்கன்றுகள் நடுவதற்கான வரைபடம் தீட்டப்பட்டது.

முதற்கட்டமாக, 18/08/2021 அன்று 12 வகையான 600 பூர்வீக மரக்கன்றுகள் நடும் பணியை, மாவட்டஆட்சியர்திரு. K. பாலசுப்பிரமணியம் தொடங்கிவைத்தார்.

இதில் பூக்கும் மரவகைகள், பசுமை மரவகைகள், பழ மரவகைகள் முதலியன இடம்பெற்றது.

வ. எண்மரங்கள்ஆங்கில பெயர்அறிவியல் பெயர்மர வகைஇடைவெளி (அடி)
1.இயல்வாகைYellow Flame TreePeltophorum pterocarpumபூ3 * 3
2.மகிழம்Bullet woodMimusops elengiபூ3 * 3
3.சென்பகம்ChampakMagnolia champacaபூ3 * 3
4.சொர்க்கம்Paradise TreeSimarouba glaucaபசுமை3 * 3
5.அரை நெல்லிAmlaPhyllanthus emblicaபழம்3 * 3
6.அரசமரம்Peepal TreeFicus religiosaபசுமை3 * 3
7.வேப்பம்Neem TreeAzadiracta indicaபசுமை3 * 3
8.புங்கம்PungamPungamia pinnataபூ3 * 3
9.பூவரசம்Portia TreeThespesia populneaபசுமை3 * 3
10.மந்தாரைBauhinia TreeBauhinia variegataபூ3 * 3
11.விளாம்பழம்Wood AppleLimonia acidissimaபழம்3 * 3
12.நாவல்JamunSyzygium cuminiபழம்3 * 3

சிற்றம்பலம் நகராட்சி திரு. L. மதுபாலன் சார் ஆட்சியர், திருமதி. M. அஜிதா பர்வின் ஆணையர், நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மியாவாக்கி பயண்கள்:

  • அடர்வனம் பகுதியில் காற்று மாசு கட்டுப்படுத்தப்படுதுடன்,
  • பறவைகள், பூச்சிகள், தேனீக்கள் வனத்தில் அதிக அளவு வரும்.
  • அவற்றின் மூலம் உயிர்ச்சூழல் மேம்படும்.
  • மரக்கன்றுகள் நன்கு வளர்ந்தவுடன் வனத்தில் செல்லும் உணர்வு மக்களுக்குக் கிடைக்கும்.

Leave a Reply